உள்நாடு

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு பேருவளை மண்ணில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் 1500 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை அஷ்ரபியா அரபுக் கல்லூரி பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று 06ம் திகதி சனிக்கிழமை கல்லூரி பழைய மாணவரும் முஸ்லிம் விவாகப் பதிவாளருமான மௌலவி அல் ஹாஜ் எம்.எஸ்.எம் பாஸில் (அஷ்ரபி – அம்ஜதி) தலைமையில் பேருவளை ஷேக் ஜமால்தீன் வீதியில் உள்ள ஹாஜியார் அப்பா தக்கியா முற்றவெளியில் இருந்து ஆரம்பமாகி பேருவளை மொல்லியம்மலை ஹிழ்ரிய்யா ஜும்மா பள்ளிவாசல் முற்றவெளிவரை இடம் பெறுகின்றது.

முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாபெரும் மீலாத் ஊர்வலத்தில் சங்கைக்குறிய ஸாதாத்மார்கள், உஸ்தாத்மார்கள் உலமாக்கள், அஷ்ரபியா அரபுக் கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பேருவளை பகுதியில் உள்ள அரபு கல்லூரிகளின் மாணவர்கள், குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் ஹிப்புளுள் குர்ஆன் மதரஸா மாணவர்கள், பிரதேச வாழ் மக்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த புனித மீலாத் ஊர்வலத்தில் பல நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட உள்ளன. இந்த மீலாத் ஊர்வல காட்சியை காண்பதற்கும் அதில் பங்குபற்றி நன்மைபெருவதற்கும் ஊர் நலன் விரும்பிகள் மற்றும் வாலிபர்கள் சிறுபிள்ளைகள் என அனைவர்களும் கலந்து சிறப்பித்து நபிகள் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்பை உள்ளத்தில் ஆழமாக பதிந்து ஈர்உலகிலும் வெற்றியை பெற்றுக் கொள்வோமாக என ஏற்பாட்டு குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *