கிராண்ட்பாஸ் பஞ்சிகாவத்தையில் துப்பாக்கி சூடு.ஒருவர் பலி.ஒருவர் காயம்.
இன்று அதிகாலை கிராண்ட்பாஸ் மற்றும் பஞ்சிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
பஞ்சிகாவத்தை தனியார் வங்கிக்கருகில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மேற்கொண்ட தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.