UNDP யின் பூட்டான் நாட்டுக்கான பிரதி வதிவிட பிரதிநிதியாக பாதில் பாக்கிர் மாக்கார்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக இலங்கையைச் சேர்ந்த பாதில் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட அலுவலகத்தில் 13 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி வந்த பாதில் பாக்கீர் மாக்கார், பேங்கொக்கை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் (UNDP Asia Pacific – Bangkok Regional Hub) ஆலோசகராக பணியாற்றி வந்ததோடு இவர் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புத்திரருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

