சீரான வானிலை நிலவும்.
மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) இலேசான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நண்பகல் 12.08 மணியளவில் எல்பிட்டிய, அமுகொட, தவலம, தெனியாய, சூரியவெவ, பெரிஹெல, கல்கடுவ ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.