கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு
கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் புதிய தலைவர், உப தலைவர் தெரிவும் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) காலை 9.00 மணிக்கு கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் அதிதிகளாக மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் பயிற்சி உத்தியோகத்தர் ஜே.எச் திமுத் இசுர , கற்பிட்டி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ் மர்ஜானா, கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம அதிகாரி பீ.எம்.எம். பைனஸ், புத்தளம் மாவட்ட செயலகத்தின் மத்தியஸ்தர் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் என் அருனராஜ், கற்பிட்டி பிரதேச செயலக மத்தியஸ்தர் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்
ஏ.எம்.எம்.டீ பர்ணாந்து ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் தலைவராக
எதிர்வரும் மூன்று (2025 – 2028) வருட காலத்திற்கு கடந்த 35 வருடங்கள் மத்தியஸ்தர் சபையின் உறுப்பினராகவும் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக உப தலைவராக கடமையாற்றிய கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபர் டபள்யூ.பீ. சகீலா தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உபதலைவராக கற்பிட்டி பிரதேச செயலகத்தில் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும்
ஜீ.வீ அனூசா தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)