கற்பிட்டி பிரதேச செயலகத்தில் முதலாவது ஜனாதிபதி நிதியம் உதவித் திட்டம் வழங்கி வைப்பு

ஜனாதிபதி நிதியம் உதவித் திட்டம் பிரதேச மட்டம் வரை விஸ்தரிப்பு: எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பயனாளிக்கான உதவி வழங்கும் நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் இடம்பெற்றது ஜனாதிபதி நிதியத்தின் பல்வகைப்படுத்தலில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் முதலாவது பயனாளியாக பள்ளிவாசல்துறை கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் ஏ.ஏ.எம். ஹாலிடீன் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் (250,000) ரூபா காசோலை கற்பிட்டி பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ் மர்ஜானா மற்றும் சமூக சேவை பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் பிரதேச மட்டத்திற்கு வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதற்கான சான்றினை உறுதிப்படுத்துகின்றது, மேலும் தகுதியான குடிமக்களுக்கு நேரடியான மற்றும் பரவலாக்கப்பட்ட ஆதரவை வழங்குவதனை நோக்காக கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)