மினுவாங்கொடை பகுதியில் மோசடி குழு செயல்பாடு

மினுவாங்கொடை பகுதிகளில் நேஷனல் லங்கா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, வீடு தோறும் சென்று பொருட்களை வழங்குவதாகச் சொல்லி, பணத்தை வசூலித்துக் கொண்டு மோசடி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்றும் எந்த விதமான பொருட்களையும் வழங்காமல் ஏமாற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக , CAY 2765 என்ற எண் பலகையுடைய நீல நிறம் வாகனத்தில் வந்த குழுவினர் பலரிடமிருந்து பணம் பெற்றுத் திரும்பிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.
(ஏ சி பௌசுல் அலிம் )