விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தயார் நிலையில் ஹெலிகள்
எல்ல-வெல்லவாய சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு உதவுவதற்காக, தியதலாவ விமானப்படை விமானப்படை முகாமில் ஒரு MI-17 ஹெலிகாப்டரும், வீரவில விமானப்படை முகாமில் ஒரு பெல் 412 ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நோயாளிகளை கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ இந்த விமானப்படை விமானங்கள் தயாராக உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.