கொழும்பு பெரிய பள்ளியில் மீலாத் நிகழ்வு
நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலகலாவிய ரீதியில் முஸ்லிம்கள் நபியவர்களின் பிறந்த தினத்தை சமய நிகழ்வுகளோடு கொண்டாடி வருகின்றனர்.
இந்த வகையில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மீலாத் நிகழ்வு ஒன்றினை பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (04) மாலை பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பெரிய பள்ளிவாசலின் மதீனதுல் இல்ம் மத்ரஸா மற்றும் கொழும்பு உம்மு ஸாவியாவின் அஜ்வாத் அல்பாஸி மத்ரஸா மாணவர்களும் அதன் உஸ்தாத் மார்கள், பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் மற்றும் பள்ளிவாசலின் ஜமாத் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நபியவர்கள் மீததான ஸலவாத்து, மௌழுது மற்றும் துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.




(ஏ.எஸ்.எம்.ஜாவித்)