உள்நாடு

கற்பிட்டி அல் ஹிரா பாடசாலை மாணவி நதா புலமைப் பரீட்சையில் கற்பிட்டி நகரில் அதி கூடிய புள்ளி பெற்று வரலாற்று சாதனை

கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி எம்.என்.எப் நதா 154 புள்ளிகள் பெற்று கற்பிட்டி நகரிலேயே அதிக கூடிய புள்ளி பெற்றவராக வரலாற்று சாதனை புரிந்துள்ளார் . அத்தோடு அதே பாடசாலையின் மாணவி எம் எப். எப் ஹயா 134 புள்ளி மற்றும் எம் எஸ் எம் இஷாக் 134 புள்ளிகள் பெற்று மூவரும் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் புத்தளம் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் எம் எம் எம் நவ்ப் தெரிவித்துள்ளனர்.

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு பாடசாலையிலிருந்து 38 மாணவர்கள் தோற்றியதாகவும் அதில் மூன்று மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 58 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் எனவும் இம் மாணவர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஆசிரியர்களான ஏ எம் எப் பாரா, ஆர்.எம் றின்ஷா,
ஏ எம்.எப் தஸ்ரிகா ஆகியோருடன் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களை அதிபர் எம் எம் எம் நவ்ப் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *