உள்நாடு

ICCPR சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்க வேண்டாம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அனைத்துலக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை பிரசித்தமாக ICCPR சட்டமென அழைக்கப்படுகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், குடிமைச் சமூக குழுக்கள் மத்தியில் சகோதரத்துவத்துடன் வாழும் நாகரிகமான மற்றும் அமைதியான சமூகத்தை உருவாக்கும் முகமாகவே இந்த சாசனம் உருவாக்கப்பட்டது. இது தான் இதன் பிரதான நோக்கமாகும்.

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சாசனம், உள்நாட்டுச் சட்ட ஒழுங்கு விதிகளால் அதிகாரமளிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வரும்போது, சில சந்தர்ப்பங்களில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பகரமாக தனிநபரின் மனித உரிமைகளை மீறுவதற்கும், அல்லது அரசியல் ரீதியாக தனிநபர்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதற்கும், அரசியல் நோக்கங்களுக்காக அவர்களை பின்தொடர்வதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சர்வதேச ரீதியாக ரபாட் செயல் திட்டம் (Rabat Plan of Action) எனும் வழிகாட்டல்கள் மற்றும் நடவடிக்கைகள் தொகுப்பு உருவாகி, அதன் 6 கட்ட பரிசோதனை மூலமே உண்மையிலயே அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை மீறப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க முடியும். தனிநபருக்கோ, குழுவொன்றிற்கோ, சமூகங்களுக்கோ இச்சாசனம் ஊடாக மீறல் நடந்துள்ளதா என்பதையும் தீரமானித்துக் கொள்ள முடியும்.

ரபாட் செயல் திட்டம் ஊடாக செய்வது, சொல்வது தொடர்பாக, கூற்றொன்றாக, செயலொன்றாக இருக்கலாம், பேசும் நபர் அதன் சூழல், அவருடைய நோக்கம், கூற்றின் உள்ளடக்கம், தன்மை மற்றும் பேச்சின் தரம், ஏற்படக்கூடிய உடனடி தீங்கு ஆகியவற்றை அடிப்படை கொண்ட நிபந்தனைகளின் தொகுப்பைக் கொண்டு பரிசீலித்து பார்க்க வேண்டும். இது ஓர் threshold test ஒன்றாகும். இந்த வழிகாட்டல் நிபந்தனைத் தொகுப்பை சர்வதேச ரீதியாக வெளியிட்டுள்ளனர். காரணம், பல்வேறு நாடுகள் இந்த ICCPR சட்டத்தை பயன்படுத்திக் கொண்டும், உள்நாட்டு சட்டங்களாலும் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதை தடுத்துக் கொள்வதற்குமே இதனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தயவுசெய்து, இந்த சாசனத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். மனித உரிமை மீறல்கள் அல்லது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உதய கம்மன்பில தலைமை வகிக்கும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ICCPR சாசனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், இந்த சாசனத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இதனைப் பயன்படுத்தி மனித உரிமை மீறலும் அரசியல் பழிவாங்களும் நடக்குமாக இருந்தால், அது முற்றிலும் தவறானதும் ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையாகும். அதன் உண்மையான நோக்கத்தின்படி அதனை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *