வெகு விமரிசையாக நடைபெற்ற அல் அஸ்லாபின் முப்பெரும் நினைவுப் பேருரைகள் நிகழ்வு
அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் 2வது தடவையாக முப்பெரும் நினைவுப் பேருரைகள் நிகழ்வு ஒன்றினை நேற்று (2) செவ்வாய்க்கிழமை தபால் திணைக்கள தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
நாட்டிற்கும் முஸ்லிம்களுக்கும் அரும் பணியாற்றி மறைந்த முன்னோர்களான சேர் ராசீக் பரீட்ட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எஸ்.இஸ்மாயில் மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோருக்கான நினைவுப் பேருரை நிகழ்வு அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றத் தலைவர் எம்.எச்.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வரவேற்புரையை மன்றத்தின் தலைவர் எம்.எச்.எம்.நியாஸ் வழங்கினார் தொகுப்புரையை மன்றத்தின் தேசிய அமைப்பாளர் எம்.இஸட்.ஏ. முனவ்வர் வழங்கினார் அதனைத் தொடர்ந்து மர்ஹ_ம் ஏ.எச்.எம்.அஸ்வர் நடமாடும் ஆவணக் காப்பகமாகும் எனும் தலைப்பில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.என்.அமீன் உரையாற்றினார், முதல் முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் எனும் தலைப்பில் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் வழங்கினார், இலங்கை சோனக சமூகத்தின் முடிசூடா மன்னன் சேர் ராஸிக் பரீத் எனும் தலைப்பில் ஜாமியா நளீமியாவின் முதல்வர் அஸ்ஸெய்க் எஸ்.எச்.எம்.பளீல் வழங்கினார்.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா கலந்து கொண்டு உரையாற்றினார் கௌரவ அதிதியாக முன்னாள் கொழும்பு மாநகர சபையின் மேயர் ஒமர் காமில் மற்றும் விசேட அதிதியாக சீனத் ரேடிங் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.எச்.எம்.மாஹிரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதன்போது கல்ஹின்னை பஹ்மி ஹலீம்தீனின் மறைந்த முன்னோர்கள் தொடர்பான கவிதைக் கானொலியும் கான்பிக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் பல கல்விமான்கள், புத்திஜீவிகள் அரச, தனியார் துறை ஊழியர்கள், மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் மூன்று முன்னோர்கள் தொடர்பான கையேட்டின் முதற் பிரதியை முஸ்லிம் ஸலாகுதீன் பெற்றுக் கொண்டார். அத்துடன் அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


















(ஏ.எஸ்.எம்.ஜாவித்)