கரையோர பூங்காக்கள் அமைக்கும் திட்டம்;ஆதம்பாவா எம்.பி.யினால் சாய்ந்தமருதில் அங்குரார்ப்பணம்
அரசாங்கத்தின் 100 பசுமையான கரையோரப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்துக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் சாய்ந்தமருது சதுக்கத்தை அண்மித்த பிரதேசத்திலும் மற்றும் கல்முனை – 2B ஆகிய பிரதேசங்களிலும் அடிக்கல் நாட்டி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் எம். துலஷிதாஸன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறித்த இத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் முன்மொழிவுக்கு அமைவாக, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இன்னும் 8 பூங்காக்கள் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)