இரண்டு உலகப் போர்களை விடவும் அதிகமான ஊடகவியலாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது..! -ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் பிரான்ஸ்செஸ்கா அல்பானீஸ்
பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், “அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேல், காஸாவில் இரண்டு உலகப் போர்களை விட அதிகமான பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ளது” என்று கூறினார்.
247 பத்திரிகையாளர்களின் உயிரைக் கொன்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தால் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் ஒரு பகுதியாக, காசாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட போரை நடத்தி வருகிறது. என்று அவர் மேலும் கூறியுள்ளார்.