இணைந்த 3 தலைவர்கள்; கவனம் ஈர்த்த சீனாவின் அதிநவீன ஆயுதங்கள்
இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் அதிபர் ஷி ஜிங்பிங் உடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட டிரோன்கள், லேசர் ஆயுதங்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளிட்ட சீனாவின் அதிநவீன ஆயுதங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.