அன்பு ஜவஹர்ஷாவுக்கான பாராட்டு விழாவும் முதுஷம் புத்தக வெளியீடும்
கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷாவுக்கான பாராட்டு விழாவும், அவரைப் பற்றிய கட்டுரைத் தொகுதி ‘முதுசொம் 75’ புத்தக வெளியீடும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) அனுராதபுரம் சிடிசி கேட்போர் கூடத்தில் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரும் இலங்கை அரபு எழுத்தணி கலைச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் பிரதமரின் மேலதிக செயலாளருமான ஏ. பி.எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்றது.
மண்டபம் நிரம்பி வழிந்த இந்நிகழ்வில் வரவேற்புரையை நாச்சியாதீவு பர்வீன் நிகழ்த்தினார். விழாவின் நோக்க உரையை நிர்வாக உத்தியோகத்தர் வட மத்திய மாகாணத்தின் பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான பணிப்பாளர் ஜே. ரழியுதீன் நிகழ்த்த தலைமை உரையை ஏ.பி.எம். அஷ்ரப் நிகழ்த்தினார்.
சிறப்புரைகள் சிரேஷ்ட உதவி கணக்காளர் நாயகம் மாஹிர் அசனார், திக்குவல்லை கமால், மூதூர் மொஹிதீன் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டன. ஏற்புரையை அன்பு ஜவஹர்ஷாவும் நன்றி உரையை கெக்கிராவ ஸுலைஹாவும் நிகழ்த்தினார்கள்.
நிகழ்வின் இடையில் சிறப்பம்சமாக கலாநிதி எம். சி ரஸ்மின் தயாரித்த ஜவஹர்ஷா தொடர்பிலான ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்வு தொய்வடையாமல் சிரேஷ்ட ஒளி ஒலிபரப்பாளர் அஹமட்.எம்.நசீர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.











