வடமத்திய மாகாண ஆளுநர் தலைமையில் அனுராதபுரம் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சொற்பொழிவு..!
அனுராதபுரம் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நரம்பியல், உளவியல் மற்றும் பார்வையியல் எதிர் காலம் குறித்த சொற்பொழிவு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் (02) நடைபெற்றது.
ஆரம்பகால சிறுவர் பருவக் கல்வி குறித்த சொற்பொழிவாளர் மனநல மருத்துவர் சமிந்த வீரசிறிவர்தன சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 22 கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த 979 முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதனை வடமத்திய மாகாண சிறுவர் மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இதற்கான அனுசரணையினை ரோகிமோ சர்வதேச அறக்கட்டளை வழங்கியிருந்தது .
இதன் போது வடமத்திய மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் கே.எம்.ஏ.எஸ்.கே.ஜயலத் ஆளுநரின் செயலாளர் என்.எச்.ஆர்.நிஷாந்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)