தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த இந்திய மதிப்பிலான ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள், 2500 கிலோ பீடி இலைகள் பறிமுதல் பறிமுதல்..!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த இந்திய மதிப்பிலான ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2500 கிலோ பீடி இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வலிநிவாரணி மாத்திரை, பீடி இலைகளை பதுக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்றவர்களை கடலோர காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துக்கு கிடைத்த தகவலின் படி தூத்துக்குடி கிழக்குக் கடற்கரை சாலை, வெள்ளப்பட்டி தருவைக்குளம் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தருவைகுளம் – வெள்ளப்பட்டி இடையேயான கடற்கரை சாலையில் வந்த மினி லாரி, போலீசாரைக் கண்டதும் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த ஓட்டுநா் இறங்கி தப்பியோடிவிட்டாா்.
சந்தேகமடைந்த போலீசார், மினி லாரியை சோதனை செய்த போது, அதில் 9 பண்டல்களில் வலி நிவாரணி மாத்திரைகள், தலா 35 கிலோ எடை கொண்ட 72 பண்டல்களில் சுமாா் 2,500 கிலோ பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வலி நிவாரணி மாத்திரையின் இலங்கை மதிப்பு ரூ.3 கோடி என்றும், பீடி இலை ரூ.50 லட்சம் என்றும் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இது தாெடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
