உள்நாடு

சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் வருடாந்த மீலாதுன் நபி மௌலித் தமாம் மஜ்லிஸ்..!

இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் பேருவளை சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் வருடாந்தம் நடைபெறும் புனித ஸ{ப்ஹான மவ்லித் மஜ்லிஸின் தமாம் வைபவம் எதிர்வரும் 04ம் திகதி வியாழக்கிழமை 04.09.2025 மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும்.
சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்று குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அல் ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) கலீபதுஷ் ஷர்துலி மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி) ஆகியோர் தலைமையில் நடைபெறும் இம்மஜ்லிஸில் தென் இந்தியா மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அல் உஸ்தாத் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஹைதர் அலி (மிஸ்பாஹி) விசேட சொற்பொழிவாற்றவுள்ளார்.
அஸர் தொழுகையைத் தொடர்ந்து புனித ஸப்ஹான மௌலித் மஜ்லிஸம் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து வலீபா யாகூதிய்யாவும், இஷாத் தொழுயைத் தொடர்ந்து ஹழரா(திக்ர்) மஜ்லிஸம் துஆப் பிராத்தனையும் அதனைத் தொடர்ந்து விஷேட சொற்பொழிவும் இடம் பெறும். சீனன் கோட்டை பள்ளிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இம் மஜ்லிஸில் கலீபதுஷ் ஷாதுலிகளான அல் ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), மௌலவி எம்.எம்.எம் ஸைனுல்ஆப்தீன் (பஹ்ஜி), மௌலவி எம்.ஐ.எம் பாரூக் (மக்கி), மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ ஏ) ஆகியோர் ஹழரா மஜ்லிஸை நடாத்தி வைப்பர். மேற்படி கலாபீட முதல்வர் அல் உஸ்தாத் மௌலவி எம்.அஸ்மிகான் (முஅய்யதி) தலைமையில் தொடர்ந்து 11 நாட்கள் ஸப்ஹான மௌலித் மஜ்லிஸ் இடம் பெற்று வந்தது.
சீனன் கோட்டை பகுதியில் தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள் மற்றும் இஹ்வான்களின் வீடுகளில் புனித ஸ{ப்ஹான மவ்லூத் மஜ்லிஸ் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த மாதத்தினை முன்னிட்டு பேருவளைப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தக்கியிக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் மின்னொளி கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *