அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கி வைத்தல் நிகழ்வு..!
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் மீரா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் 2025.08.31ம் திகதி நிந்தவூரில் நடைபெற்றது . இலங்கையில் காணப்படும் பதில் செய்யப்பட்ட ஊடக அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஹாசிம் உமர் பௌண்டேசன் அமைப்பபின் திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கப்பட்டது.இன் நிகழ்வின் போது அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் சார்பாக தலைவர் மீரா இஸ்ஸதீன் ஹாசிம் உமர் பௌண்டேசன் ஸ்தாபக தலைவர் ஹாசிம் உமர்
அவர்களுக்கு நன்றியையும் பிரார்த்தனையை யும் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட செய்தியாளர் -இஸட்.ஏ.றஹ்மான்)



