உள்நாடு

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கேக் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் cake picnic நிகழ்வு

கேக் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கேக் பிக்நிக்(cake picnic) எனும் நிகழ்வு பேருவளை மருதானை மனாரா பீச் ரெசோட்டில் நடைபெற்றது.

களுத்துறை மாவட்டத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் 50 கேக் உற்பத்தியாளர்கள் பங்குபற்றியதோடு 80 வகையான கேக் இங்கு வைக்கப்பட்டிருந்தன. வரலாற்றில் முதல் தடவையாக cake picnic திறந்த வெளியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும் ஸ்லைஸ் (garden slice) எனும் தொனிப்பொருளின் கீழ் பேருவளையில் பிரசித்தி பெற்ற கேக் தயாரிப்பாளர்களான சஸ்லா உனைஸ் ( cake by shazla unais), அரூஸா ஆஸாத் (aroosa bakes), ரிப்பத் சதா ரியால் (rr.cake creatives),இச்ரா அஸாட் (cakeish) ஆகியோரினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுய தொழிலாக கேக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கேக் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அவர்களது தொழிலில் இஸ்திரத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பேருவளை, களுத்துறை,அடுளுகமை, தர்கா நகர்,வியங்கல்லை,காலி மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து தமது கேக் தயாரிப்புகளுடன் கேக் தயாரிப்பாளர்கள் மிகவும் ஒற்றுமையாக கலந்து பயன்பெற்றனர்.இலங்கையின் முன்னனி Chef ஹசித சில்வா மேற்பார்வையாளராக பணியாற்றினார். பேருவளையில் கேக் தயாரிப்பு உபகரணங்கள், மூலப்பொருட்கள் விற்பனையாளராக திகழும் பேக் கெலரி ஸெரன்டிப் (cake gallery serendib) நிறுவனம், இலங்கையின் பிரதான தயாரிப்பாளரான அஸ்ட்ரா astra ,டம் டம் dum dum மற்றும் பய்ரஹா பாம்ஸ் தனியார் நிறுவனம் ( bairaha fams pvt limited) ஆகிய நிறுவனங்கள் அனுசரணையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேருவளை பகுதி முன்னனி கேக் தயாரிப்பாளரான சஸ்லா உனைஸ் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

களுத்துறை மாவட்டத்தில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் கேக் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக மேற்படி நான்கு கேக் உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட முயற்சியை பலரும் பாராட்டினர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *