மத்ரஸதுல் முஹம்மதியா பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு
மத்ரஸதுல் முஹம்மதியா பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (31) மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஜே.எம்.ஜெம்ஸித் என்ற மாணவனின் கிராத்தினை தொடர்ந்து வரவேற்புரையினை மௌலவி ஏ.ஆர் ஜீஸான் தப்லிகி உரையாற்றினார்.அதனை தொடர்ந்து விஷேட உரையை மௌலவி எம்.எம்.தௌபீக் உரையாற்றியதோடு, மத்ரசா உருவாக்கப்பட்ட நோக்கம், சிறப்பு, வளர்ச்சி மற்றும் உருவாக்கம் பற்றி மௌலவி பி(B).எம்.ரிபாஸ் தெளிவாக எடுத்துரைத்தார். இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மிக சிறமத்திற்கு மத்தியில் கல்வி பயின்று வருவதாகவும், அவர்களுக்கு மார்க்க கல்வி மட்டுமல்லாது கணிதம் ஆங்கிலம் போன்ற பாடங்களையும் கற்பிக்கப்போவதாகவும் அதற்கான ஆசிரியர்கள் தாமாக முன்வந்து இருப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர்களில் பங்களிப்பு மிக முக்கியம் எனவும் சுட்டிக்காட்டியதோடு, இம்மத்ரஸாவானது தற்காலிகமாக பள்ளிவாசல் கட்டிடத்திலேயே இயங்கி வருவதாகவும், இதற்கான ஒரு தனியான கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பெற்றோர்களால் அன்பளிப்புப் பொருட்களும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும், மத்ரசதுல் முஹம்மதியாவின் தலைவருமான எம்.எஸ்.எம். வசீர், பள்ளிவாசலின் செயலாளர், பொருளாளர் உட்பட மத்ரஸாவின் முன்னைய உறுப்பினர்கள், பெற்றோர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)