கொழும்பில் கொண்டாடப்பட்ட 68 வது மலேஷிய சுதந்திர தினம்.

மலேசியா நாட்டின் 68வது தேசிய சுதந்திர தினம் 31.08.2025 கொழும்பு சினமன் லைப் சிட்டி ஹோட்டலில் மலேசியா நாட்டின் இலங்கை மாலைதீவுக்கான உயர் ஸ்தாணிகர் பதில் ஹசாம் ஆதம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு அரசாங்கத்தின் சார்பாக பிரதம அதிதியாக டொக்டர் உபாலி பன்னலிகே சமுக பாதுகாப்பு அபிவிருத்தி அமைச்சர் கலந்து கொண்டார். அத்துடன் மலேசியா நாட்டின் துாதரக அதிகாரிகள், மேல் மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பிணர்கள் முஜிபு ரஹ்மான், ரவுப் ஹக்கீம், காதர் மஸ்தான், மற்றும் பொலிஸ் மா அதிபர், ஏனைய நாடுகளின் துாதுவர்கள் மற்றும் மலே சங்கம்,வை.எம்.எம்.ஏ போன்ற சங்கங்களின் உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் டொக்டர் உபாலி பன்னலிகே… மலேசியா – இலங்கைக்கான நட்புரவுகள் கடந்த 1957 ஆம் ஆண்டிலிருந்து நிலவி வருகின்றது. அன்மையில் மலேசியா நாட்டின் பிரதமரை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத் அவர்கள் இலங்கையின் உள்ள இளைஞர்களுக்கு தொழில்வாயப்பு.கல்வி ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் போன்ற துறைகளில் விரிவாக பேச்சுவாத்தை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையார்கள் கூடுதலோனோர் தொழில் வாய்ப்புக்கும் மற்றும் உயர்கல்வி கற்பதற்காக மலேசியா சென்றுள்ளமையும் விரிவாகக் அமைச்சர் கூறினார்.






(அஷ்ரப் ஏ சமத்)