உள்நாடு

உயர்தரத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கு வடமத்தியில் கெளரவம்.

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023 / 2024 க . பொ. த உயர் தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கெளரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் (31) அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில்  06 பாடப் பிரிவுகளின் கீழ் 01_ 10  வரை இடங்களைப் பிடித்த 241 மாணவர்களுக்கு தலா 100.000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பணவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதற்காக ஜனாதிபதி நிதியம் 241 மில்லியன் செலவிட்டுள்ளது.ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரையாற்றியதோடு இத்திட்டத்தின் நோக்கத்தை தெளிவுப்படுத்தினார்.

பிரதான உரையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிகழ்த்தியதோடு  ஜனாதிபதி நிதியம் அதன் உண்மையான வகிபாகத்தை உணர்ந்து மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்கி வருவதாகவும் அது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

இதன் போது  காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும் விழாவில் உரையாற்றினர்.பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாணயக்கார,பாக்யா ஸ்ரீ ஹேரத், நிலவின சமரகோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதே வேளை வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகத்தின் துறைசார் அதிகாரிகளுக்கான விசேட ஒரு நாள் பயிற்சிநெறி (30) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் ஜனாதிபதி நிதி விடயங்களை கையாளும் துறைகள் அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வில் விளக்கப்பட்டது.

(எம் .ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *