இன்று யாழில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று யாழில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார் என்பதும் சுட்டிகாட்டத்தக்கது.
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலின்படி, இன்று காலை 8.30 மணிக்கு மயிலிட்டியில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.
தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்திள் கடவுச்சீட்டு பணிமனையை ஆரம்பித்து வைப்பார். அங்கிருந்து, யாழ். பொது நூலகத்துக்கும் அவர் செல்வார்.
இதன் பின்னர், மதியம் 1.30 மணியளவில் மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளைத் தொடக்கி வைப்பார். அத்துடன், வேறு சில நிகழ்வுகளிலும் சந்திப்புக்களிலும் ஜனாதிபதி ஈடுபடுவார்.
இதைத் தொடர்ந்து நாளை (02) முல்லைத்தீவுக்குச் செல்லும் ஜனாதிபதி அநுரகுமார, வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணியைத் தொடக்கி வைப்பார். அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.