ரணிலுடன் இணையும் சஜித் பிரேமதாச
செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சண்டே டைம்ஸுக்கு பேட்டியளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க மாநாட்டுக்கு சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த மாநாட்டின் போது ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ளார்.