முஷர்ரபாவுக்கு ஜனாதிபதி சான்றிதழும் பணம் பரிசும்
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட த்தின் மாணவி முஷர்ரபா முஅன்ன ஸ் ஜனாதிபதி பாராட்டு சான்றித ழையும் 100000 ரூபா அன்பளிப்பை பையும் பெற்றுக்கொண்டார்.
2003/2004 ஆம் ஆண்டுகளில் மாவட் ட மட்டத்தில் அதி சிறந்த சித்தி Z-score பெற்ற மாணவர்களுக்கு வழ ங்கப்படும் சப்ரகமுவ மாகாண பா ராட்டு நிகழ்வு கடந்த வாரம் இரத்தி னபுரி மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற போது இவர் இச்சான்றித ழைப் பெற்றுக் கொண்டார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தமிழ் மொழி மூலம் தகுதி பெற்ற ஒரே மாணவி இவராவார் பலாங் கொடை இ/கனகநாயகம் தேசியக் கல்லூரியின் மாணவியும் பலாங் கொடை இ/ஜெயிலானி தேசியப் பாடசாலையின் பழைய மாணவியு மான இவர் பலாங்கொடை பிரதேச சமூக ஆர்வலர் எம்.எஸ்.எம்.முஅன் னஸ் தம்பதிகளின் ஏக புதல்வியும் ஆவார்.கபொத சா தாரண தரப்பரீட் சையில் 9 ஏ சித்தியையும் கபொத உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தியை யும் 2.1644 Z- score புள்ளிகளையும் பெற்று இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக சித்தி பெற்ற மாணவியாக வும் திகழ்கிறார்.இவரது வெற்றிக் காக பங்களிப்பு செய்த அதிபர்கள் ஆசிரியர்கள் அதிகாரிகள் உட்பட ஒத்துழைப்புகளை வழங்கியவர்க ள் அனைவருக்கும் தனது நன்றிக ளை இவர் தெரிவித்துள்ளார்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)