ஹாஜிகளின் பணத்தை பாதுகாப்பதும் ஹாஜிகள் சிறந்த முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றவே புதிய நடைமுறை; இலங்கை ஹஜ், உம்ரா குழுத் தலைவர் றியாஸ் மிஹ்லார்
அடுத்த வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(28) மாலை நடைபெற்றது.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் இலங்கை ஹஜ்இ உம்ரா குழுத் தலைவர் றியாஸ் மிஹ்லார் 2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காகவே. ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக மக்கள் மத்தியில் சில தப்பபிப்பிராயங்கள் இருப்பதால் அவற்றை சரியான முறையில் தெரிவிப்பதற்கே இந்தமாநாடு அமையும்.என தான் நினைப்பதாகவும் இம்முறை ஹாஜிகளின் பணத்தை பாதுகாப்பதும் ஹாஜிகள் சிறந்த முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குமே புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக ஹஜ் குழு தலைவர் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு ஹஜ் தொடர்பாக சவுதி ஹஜ் அமைச்சு மூலம் பல மாற்றங்கள் செய்துள்ளார்கள். பிரதான மாற்றங்கள்தான் சோன் புக்கிங்இ ரூம் புக்கிங் மற்றும் மாஸாயிர் என்று சொல்கின்ற மினா, அறபா போக்குவரத்து ஹோட்டல் என்பவற்றை முன்கூட்டியே பெறுவதற்கு பயத்தை செலுத்துவதற்கு அவர்கள் ஒரு ரெட் லைன் கொடுத்துள்ளார்கள்.
இந்தவருடத்திற்கான ஹஜிக்கான சோனுக்கான பணத்தை இந்த வருடம் பெப்ரவரியில் கட்டினோம். 2026ஆம் ஆண்டு ஹஜ்ஜிக்கு சோன் புக்கிங் மற்றும் மஸாயில் போன்ற வற்றி;கான கொடுப்பனவை ஆகஸ்ட் 23ஆம் திகதிக்கு முன் கட்டி முடிக்க வேண்டும் என எங்களுக்கு அறிவித்துள்ளார்கள்.கடந்தவருட சோன் தேவை என்றால் அதனை நாங்கள் புக்பன்ன வேண்டும் இல்லாவிட்டால் அங்கு சோன் இருக்கின்றாதிரியேதான் எமக்கு புக்பன்ன முடியும். எங்களுக்கு நல்ல ஒரு சோன் தேவை என்றால் அதற்கு நாங்கள் முன்கூட்டியே புக்பன்ன வேண்டும் என்றார் தலைவர்.
2026ஆம் ஆண்டு ஹஜ்ஜிக்கு சுமார் 10 மாதங்களுக்கு முன் இந்த ரெட் லைன போட்டிருக்கின்றார்கள். அதேபோல் ஹோட்டல்இ மற்றும் ஏனைய அக்கமன்டேசன் போன்றவற்றிகு எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன் புக்க பன்ன வேண்டும் என அறிவித்துள்ளார்கள். இலங்கையைப் பொருத்த வரை இது எங்களுக்கு பெரிய சவால் ஒன்றாகும். நாங்கள் ஹஜ் செய்வது ஹஜ் முகவர்களினூடாகவே நாங்கள் ஹஜ் முகவர்களை நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்து அவர்களுக்கே நாங்கள் கோட்டாக்களை கொடுத்து புக்கிங் செய்கிறோம்.
இந்த வருடம் எங்களுடைய செயல் முறை ஒவ்வொரு வருடமும் செய்வதுபோல் விண்ணப்பங்கள் கோரியுள்ளோம். குடந்த வருடம் எங்களிடத்தில் 92 முகவர்கள் இருந்தார்கள். இந்த வருடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஆகஸ்ட் 29 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அந்த விண்ணப்பங்கின்படி நாங்கள் ஒரு நேர்முகப் பரீட்சைக்கான குழுவை நியமித்து அந்த குழுவின் மூலம் ஒரு விதிமுறைகளை வைத்திருக்கின்றோம் அதன் மூலம் யார் தெரிவு செய்யப்படுகின்றார்களோ அதன் பின்னர் அவர்களுக்கான கோட்டாவை நாங்கள் வழங்குவோம். ஆதன் பிறகேதான் முகவர்களை புக் பன்ன வேண்டும்.
கடந்த வருடம் எங்களுக்கு ஒரு சலுகை தந்தார்கள் மனிh மற்றும் அறபா போன்ற இடங்களுக்குhன கொடுப்பனவை பிறகு கட்டலாம் என்று. அதனால் கடந்த முறை இறுதி நேரத்தில் திணைக்களத்தால் முற்பணம் கட்டி நாங்கள் புக் பன்னினோம்.. அதன் பிறகு நாங்கள் முகவர்களை தெரிவு செய்த பிறகு நாங்கள் செலுத்திய முற்பணத்தை முகவர்கள் எங்களுக்கு திருப்பி தந்தார்கள். இந்த முறை சோன் புக்கிங் மட்டும் கட்ட இயலாது மினாஇ அறபா என்பனவற்றிற்கு இம்முறை வருகின்றது சுமார் 2 பில்லியன் ரூபாய்கள். இந்த பணம் எங்கள் திணைக்களத்தில் கட்டுவதற்கு எங்களிடனம் பணம் இல்லை. முகவர்களுக்கு நாங்கள் கட்டச் சொல்லி சொல்ல முடியாது ஏனென்றால் நாங்கள் இன்னும் அவர்களை தெரிவு செய்யவுமில்லை அவ்களுக்கு கோட்டா கொடுத்தும் இல்லை.
இதில் பிரச்சினை உள்ளது.
அதனால்தான் நாங்கள் முடிவு எடுத்தோம் எப்படி செய்வது என்று சிலரிடம் முற்பணம் உள்ளது. அப்பதான் நாங்கள் முடிவு எடுத்தோம் ஒரு வங்கியை ஒழுங்கு செய்து அவர்களை வங்கிக் கணக்கு ஆரம்பித்து அதில் போடலாம் என்று அதனால்தான் நாங்கள் 3 வங்கிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம் ஒன்று அமானா மற்றது இலங்கை வங்கியையும் மக்கள் வங்கியையும் இஸ்லாமிய அடிப்படையில் தெரிவு செய்து கேட்டோம் ஒரு இன்சுறன்ஸ் செய்துமுற்பணம் செலுத்த இயலுமா அவர்களுக்கு செய்தோம் அதில் அமானா வங்கியில் எங்களுக்கு முழு விடயங்களிலும் சம்மதம் தெரிவித்தார்கள்.
அந்த அடிப்படையில் நாங்கள் அமானா வங்கியை தெரிவு செய்தோம்.
இந்த அடிப்படையில் நாங்கள் சொல்கிறோம் ஹாஜிமாருக்கு அமானா வங்கியில் அவர்களின் பெயரில் வங்கிக் கணக்கை திறந்து அதில் அந்த முற்பயத்தை இட்டு அந்தப் பணம் மஸாயிலுக்கு வழங்கவோ அல்லது முகவர்களுக்கு வழங்கும் வரை அந்தப் பணம் வங்கியில் இருக்கும் அத்தோடு அந்த முற்பணம் வங்கயில் இருக்கும் வரை அவர்களுக்கு அந்தப் பணத் தொகைக்கு ஒரு தொகை வருமாணமும் ஹாஜிமாருக்கு கிடைக்கும்.
குறிப்பாக ஏழரை இலட்சம் வங்கியில் இட்டால் அது இரண்டு மாதம் இருந்தால் அந்த 2 மாதத்திற்கும் அந்த ஹாஜிகளுக்கு ஒரு தொகை வருமானம் அவர்களின் கணக்கிலேயே வைப்பிலிடப்படும். இதில் இரண்டு விடயம் இருக்கின்றது ஒன்று மஸாயில் பேமன்ட் இன்னொரு நன்மையும் இருக்கின்றது கடந்த வருடம் எங்களுக்கு நிறைய முறைப்பாடுகள் கிடைத்தன. அதாவது ஹாஜிகள் முற்பணத்தை சில முகவர்களுக்கு கொடுப்பது அந்த வேலையில் சில சமயம் ஹாஜிகளின் வீசா தடைப்பட்டு போகக் கிடைக்காவிட்டால் சில முகவர்கள் அவர்களின் பணத்தை திரும்ப பொடுப்பதில் பல கஸ்டங்களை எதிர் கொள்வதுடன் தமது பணத்தை மீளப்பெற மாதக் கணக்கில் செல்கின்றனர்.
ஆனால் இந்த புதிய முறையில் ஒரு ஹாஜியின் வீசா போக முடியாது நிராகரிக்கப்பட்டால் வங்கயில் இருக்கும் பணத்தை அவர்கள் உடன் பெற்றுக் கொள்ள முடியும். ஹஜ் குழு கடிதம் கொடுத்தால் அந்தப்பணத்தை உடன் மீளப் பெறலாம். ஹாஸிமாருக் அவர்களின் பணத்திற்கு பாதுகாப்பும் இருப்பதுடன் அவர்களின் பணம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது இதுதான் அதில் முக்கியமான விடயமாகும். ஒரு சுpல முகவர்கள் ஹாஜிமாரிடம் பாஸ்போட்டை எடுத்து முற்பணத்தை எடுத்து குறிப்பா மூன்றுஇ நான்கு இலட்சத்தை கையில் எடுத்துவிட்டு அவர்கள் போக முடியாத நிலை வந்தால் அவர்கள் கொடுத்த பணத்தை மீளப் பெறுவதில் ஹாஜிமார் பெரிய சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த புதிய வங்கி முறையில் நாங்கள் முடிவு எடுத்தோம் இரண்டு முகவர் அமைப்புகளுடன் நாங்கள் கலந்துரையாடினோம் அவர்களும் இந்த முறைi மநல்லது என்று கூறினால்கள் அதன் பிறகுதான் நாங்கள் அமானா வங்கிக்கு சென்றோம். அன்ஸா அல்லாஹ் அடுத்த வருடம் நாங்கள் மேலும் பல வங்கிகளுடன் இதுவிடயத்தில் கதைக்க உள்ளோம் இம்முறை எங்களுக்கு நேரம் போதாததால் மூன்று வங்கிகளிடமே சென்றோம். என்றார் ஹஜ் குழு தலைவர்.
ஹஜ்இ உம்ரா குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவியும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பாக கருத்துத்களைத் தெரிவித்தனர்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் 2025ஆம் ஆண்டின் தேசிய மீலாத் விழா மற்றும் அதன் ஏற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் ஹஜ் , உம்ரா குழு உறுப்பினர்களான சட்டத்தரணி ரி.கே.அஸூர், எம்.எஸ்.பௌசுல் ஹக் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.நிலவ்பர் மற்றும் திணைக்களத்தின் கணக்காளர் எஸ்.எல்.எம்.நிப்ராஸ், ஆகியோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)