அரநாயக்க திப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியர் ஒன்றுகூடல்
கே/அரநாயக்க திப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியர் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவும் ,ஒன்று கூடலும் அதிபர் முஹம்மது ஸாலிம் அப்துல்லாஹ் (நளீமி) தலைமையில் அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது.
பாடசாலையின் அபிவிருத்தியை முன்னிட்டு, பழைய மாணவியர் சங்க செயலாளர் நிஸா ஆப்தீன் மற்றும் அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் அன்றைய தினம் நடைபெற்ற “BACK TO SCHOOL” நிகழ்ச்சியில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இக்கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவியர் அனைவரும் சமூகமளித்து இருந்தனர்.
இங்கு ஓய்வு பெற்ற அதிபர் மிர்ஸியா அவர்களும், அல் அரபா பாடசாலை அதிபர் சிறீன் மற்றும் பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் பர்ஹான் உமர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் .







(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)