ஹொரவப்பத்தானை விபத்தில் இருவர் பலி..!
ஹொரவப்பொத்தானை எலயாப்பத்துவ பகுதியில் (28) பிற்பகல் இடம்பெற்ற லொறி விபத்தில் 10 வயது சிறுமி ஒருவரும் 27 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கண்ணாடி ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகிச் சென்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடி ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி சாரதிக்கு தூக்கம் ஏற்பட்ட மையினால் வீதியை விட்டு விலகி ஹொரவப்பொத்தானை மொரக்கேவ பகுதியில் உள்ள கஹட்டகஸ்திகிலிய நோக்கிச் செல்லும் பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஹொரவப்பொத்தானை மொரகேவ பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் 10 வயது சிறுமி ஒருவரும் 27 வயதுடைய லொறி உதவியாளரும் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த போது லொறியில் மூன்று பேர் இருந்துள்ளனர்.மேலும் சாரதியும் மற்ற நபரும் காயமடைந்து ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)



