நெல் உற்பத்தித்திறன் மேம்படுத்தல் திட்டம் – 2025
நிந்தவூர் – பிரதேசத்தில் நடைபெற்ற “ரண்சறுபொல முறைமையில் பயிரிடுவோம் விவசாயிகளை ஊக்குவிப்போம்” என்ற கருப்பொருளில் விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நெல் அறுவடை நிகழ்வு வெற்றிகரமாக நேற்று முன்தினம் (02) சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.
சிஐசி பொது முகாமையாளர் கே.எம். சுக்ரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். லத்தீப், விவசாய பிரதிப்பணிப்பாளர் டாக்டர் லக்மால், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ. அஸ்பர் ஜே.பி, பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)







