பாலியல் வன்கொடுமை; நான்கு பல்கலை மாணவர்கள் கைது
களனிப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறையின் பொது புகார்கள் புலனாய்வுப் பிரிவினரால், நேற்று முன்தினம் (27) நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மேலும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை மேலும் கூறுகிறது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் தற்போது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
புகைப்படம் எடுத்தல், வாகன பொறியியல் மற்றும் திரைப்பட இயக்கத்தில் ஈடுபட்டுள்ள மூன்று மாணவர்கள் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அவர்கள் வெல்லவாய, ஹபராதுவ, வவுனியா மற்றும் மஹகிரில்ல பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதுடன், 26 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள்.
ஏழு சிரேஷ்ட மாணவர்கள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, காலையில் சிறைபிடித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.