செப்டம்பர் 12 வரை அதுரலியே ரத்ன தேரருக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரத்தன தேரர் இன்று (29) மதியம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
அவரைக் கைது செய்யக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2020 பொதுத் தேர்தலில் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக ‘அபே ஜன பல’ கட்சியின் பொதுச் செயலாளர் வண. வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைககளில் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.