கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் முன்பள்ளி வருடாந்த கண்காட்சி இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்றது..!
கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கண்காட்சி இம்முறை இரண்டு நாட்கள் பாடசாலையின் வளாகத்தில் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா தலைமையில் சிறப்பாக கடந்த புதன், வியாழன் (27,28) இடம்பெற்றது.
கண்காட்சி நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.
கௌரவ அதிதிகளாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம் நிப்ராஸ், கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் , கிராம உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம் முசாதீக் ஆகியோர் கலந்து கொண்டனர்
சிறார்களின் திறமை மற்றும்
ஆற்றல்கள் கழிவுப் பொருட்களை கொண்டு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக கண்காட்சி பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் கற்பிட்டி பிரதேசத்தின் பாரம்பரிய பழமையான அன்றாட பாவனைப் பொருட்களும் காட்சி படுத்தப்பட்டு இருந்ததையும் பார்வையாளர்கள் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)






