உலகம்

புதுடில்லி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தைப் பார்வையிட்ட ரவூப் ஹக்கீம்

புதுதில்லியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தலைமை நிலையம் காயிதே மில்லத் சென்டரை புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தந்து புதிய அலுவகத்தை பார்வையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய புதிய தலைமை நிலையம் காயிதே மில்லத் சென்டர் திறப்பு விழா 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுதில்லியில் உள்ள தர்யா கஞ்ச் சியாம் லால் மார்கில் உள்ள இடத்தில் திறந்து வைக்கப்பட்டது. அன்று இன்று வரை பல்வேறு மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் வந்தம் வண்ணம் இருக்கிறார்கள். அதேபோல் பொதுமக்களும் இந்திய முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தை தினமும் வந்து புகைப்படம் எடுத்து கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் அரசு முறை பயணமாக இலங்கை இந்தியா நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு புதுதில்லிக்கு வருகை தந்தார்கள். அந்த குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வருகை தந்தார். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய புதிய தலைமை நிலையம் காயிதே மில்லத் சென்டருக்கு 27.08.2025 புதன்கிழமை மதியம் வருகை தந்த அவருக்கு தலைமை நிலைய நிர்வாகி பைசல் சிறப்பான வரவேற்பு அளாத்தார்.

பின்னர் அவர் ஒவ்வொரு மாடிக்கு சென்று அலுவகத்தை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு இல்லாமல் புதுதில்லியில் தலைமை அலுவகத்தை நிறுவிய பெருமை தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் மற்றும் கேரளா தலைவர்கள் சாதிக் அலி ஷிகாப் தங்கள், பி. கே. குஞ்சாலிகுட்டி உள்ளிட்ட தலைவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த அலுவகம் அமைந்துள்ளது என்று தனது மகிழ்ச்சியான செய்திளை பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு போன் மூலமாக பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை அலுவகம் பொறுப்பாளர் பைசல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளர் காயல் மகபூப், தமிழ்நாடு ஜ. டி. வீங் பொருளாளர் கோம்பை நிஜாம்தீன், மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் இருந்தார்கள்.

(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *