பல தடவைகள் மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
வடமேல் மாகாணத்தில் இலேசான மழை பெய்யலாம்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இவ் வருடம் ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இதனால் இன்று (28) நண்பகல் 12.11 அளவில் நயினாதீவு, பூநகரி, மணல்காடு, ஆழியவை போன்ற பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்.