ஆஸியிலிருந்து வெளியேறிய ஈரான் தூதுவர்..!
அவுஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டுக்கான ஈரானிய தூதுவர் அஹமது சடேகி வெளியேறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் , யூதர்களுக்கு எதிராகக் குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியதாக, அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுகிறது என்று அவர் அறிவித்தார்.
மேலும், அந்நாட்டுக்கான ஈரானின் தூதுவர் அஹமது சடேகி வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரானின் தூதுவர் அஹமது சடேகி, அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று வெளியேறியதாக, வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.