சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 23 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை- இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத் தூதுக்குழுவினர் புதுதில்லிக்கு வருகை..!
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 23 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை- இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத் தூதுக்குழுவினர் புதுநில்லிக்கு வருகை தந்துள்ளார்கள்.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 23 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை- இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத் தூதுக்குழுவினர் , ஆகஸ்ட் 26 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய ஜனநாயகத்தில் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம், இந்திய ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு மற்றும் நாடாளுமன்ற வளாகம் மற்றும் சன்சத் தொலைக்காட்சியின் சுற்றுப்பயணம் குறித்த கலந்துரையாடல்களை இந்தக் குழுவினர் நடத்தினர்.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,ரவி கருணாநாயக்க ஸ்ரீதரன் சிவஞானம் ஆகியோர் உட்பட இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பயணத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு பல்வேறு விதமான உறவுகளை பற்றி கலந்துரையாடல் செய்ய இருக்கிறார்கள்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)


