ஐந்து பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேஷியாவில் கைது
“கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாதாள உலக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூடுதலாக, கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் உறுப்பினரான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளடங்குவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஜகார்த்தா காவல்துறையின் சிறப்புக் குழு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்தார்.