உள்நாடு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடன் இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.

“அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது.

பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம்.

தேசிய வைத்தியசாலையில் காத்திருப்பு பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும்.

எனவே, அவர் தனது சொந்த செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும்.

தற்போது, ​​அவருக்கு கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது.

அந்த நிலை படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது.

அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *