Uncategorizedஉள்நாடு

பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரி 60 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கு 10 ரூபாவாக நிலவிய விசேட பண்ட வரி 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த வரி திருத்தம் நேற்று முதல் 03 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என்று நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று கடந்த சில நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *