உள்நாடு

கொழும்பில் முப்பெரும் நினைவுப் பேருரைகள்

அல்-அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்யும் முப்பெரும் நினைவுப்பேருரைகள் வைபவம் எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4மணிக்கு கொழும்பு 10 டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையிலுள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இவ்வைபவத்துக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதியாக கொழும்பு மாநகர முன்னால் மேயரும் சோனக இஸ்லாமிய கலாச்சார நிலைய தலைவருமான அல் ஹாஜ் ஒமர் காமில், ஸினத் நிறுவனத் தலைவர் AHM மாஹிர் சிறப்பு அதிதியாகவும் வருகை தரவுள்ளனர்

அல்-அஸ்லாப் மன்றத் தலைவர் MHM.நியாஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பேராதனைய பல்கலைக்கழக பேராசிரியர் MSM. அனஸ் (மெய்யியல் துறையின் முன்னாள் தலைவர்) ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் S.H.M. பளீல் (நளீமி), மூத்த ஊடகவியலாளர் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் NM.அமீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், MZ.அஹமத் முனவ்வர் இந்நிகழ்வை நெறிபடுத்த உள்ளார்.

இது சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்து மறைந்த தலைமைகளை நினைவு கூறுவதற்காக உருவாக்கப்பட்ட அல்-அஸ்லாப் நினைவு மன்றம் நடத்தும் இரண்டாவது நினைவு பேருரை என மன்றச் செயலாளர் ஹில்மி முஹம்மத் (முன்னாள் தகவல் திணைக்களப் பணிப்பாளர்) தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *