ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவும்; செப்டம்பர் 27 இல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் போரத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழா, செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு, இலக்கம் 211 ஒராபி பாஷா வீதி, மருதானை, கொழும்பு 10, அமானி கிறேண்ட் (AMANI GRAND) மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியாளருமான அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானி
பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இம்மாநாட்டின் போது, முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம் பெறவுள்ளது.
முஸ்லிம் மீடியா போரத்தின் அடுத்த ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழுத் தலைவர் பதவிக்காக எம்.பீ.எம். பைரூஸ், இர்ஷாட் ஏ காதர், எம்.எப். ரிபாஸ், ரிப்தி அலி ஆகிய நால்வரும், பொதுச்செயலாளர் பதவிக்காக எம்.எஸ். பாஹிம், என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான், ஸமீஹா சபீர் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர். பொருளாளராக கியாஸ் ஏ. புஹாரி போட்டியின்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிறைவேற்றுக் குழுவுக்கு 15 பேர் கொண்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்காக, 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன், இதற்கான தெரிவும் பொதுக்கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம் பெறும் என, நியமனக்குழு அறிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றுக் குழுவிற்காக, என். ஆஷிக் முஹம்மத், கே. அப்துல் ஹமீத், ஏ.பி. அப்துல் கபூர், எம். அப்துர் ரஹ்மான், அஷ்ரப் ஏ ஸமத், அதீபா தௌஸீர், கே. அஸீம் முஹம்மத், எஸ்.எல். அஸீஸ், பரீட் இக்பால், எம்.எப்.எம். பர்ஹான், எஸ்.ஏ.எம். பவாஸ், ஏ.எச்.எம். பௌஸான், ஏ. புஹாது, ஐ.எம். இர்ஷாத், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், யு.எல். மப்ரூக், எம்.ஐ. முஹம்மத் ரியாஸ், எஸ்.எம்.எம். முஸ்தபா, பீ. எம். முர்ஷிதீன், எம்.ஏ.எம். நிலாம், எம்.ஐ. நிஸாம் டீன், ஏ.எல்.ஏ. ரபீக் பிர்தௌஸ், ஏ.கே.எம். ரம்ஸி, ஏ.சி. ரிஸாத், ரிஸ்வான் சேகு மொஹிடீன், எம்.எஸ்.எம். ரிஸ்வான், ஷிஹார் அனீஸ், எஸ்.என்.எம். சுஹைல் மற்றும் உமர் அரபாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )