திகாமடுல்ல மீடியா போரத்தின் நிகழ்வுகள்
திகாமடுல்ல மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கான ஊடக செயலமர்வும், டீசேட் வழங்கும் நிகழ்வும், கௌரவிப்பும் ஒலுவில் கிரீன்வில்லா ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஊடகமும் மொழியும், மற்றும் ஊடகவியலாளர்களின் ஒழுக்க கோவை எனும் தலைப்புக்களில் வருகைதரு விரிவுரையாளரும் ஆசிரிய ஆலோசகரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜெஸ்மி எம் மூஸா, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை இருக்கைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் செயலமர்வை நடத்தனர்.
போரத்தின் அங்கத்தவர்களுக்கு இலச்சினை பொறிக்கப்பட்ட டீசேட் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.எம். அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபீர், வைத்தியர் கே. எல்.எம்.நக்பர், குலோபல் விசன் மாகாண பணிப்பாளர் ஜே. றியாஸ், தொழிலதிபர் அஹமட் ஹஸாரி ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
அமைப்பின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜே. எம். ஹனிபா நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.









(றிபாஸ்)