சீனன்கோட்டை பாஸிய்யா கலா பீடத்தில் ஸுப்ஹான மெளலித் தமாம் ஆரம்பம்
இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் பேருவளை சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் வருடாந்தம் நடைபெறும் புனித ஸுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் 24ம் திகதி மாலை ஆரம்பமானது.
கலாபீட முதல்வர் அல் உஸ்தாத் மௌலவி எம்.அஸ்மிகான் (முஅய்யதி)தலைமையில் ஆரம்பமானது இந்த நிகழ்வில் உலமாக்கள், பெருமளவிலான இஃவான்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 11நாட்கள் புனித மஜ்லிஸ் இடம்பெறுவதோடு செப்டம்பர் 4ம் திகதி தமாம் மஜ்லிஸ் சீனன் கோட்டை பாஸியா பெரிய பள்ளிவாசளில் நடைபெறும்.28ம் திகதி முதல் தென் இந்தியா மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அல் உஸ்தாத் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஹைதர் அலி ( மிஸ்பாஹி) விசேட சொற்பொழிவாற்றவுள்ளார்.
புனித ரபியுல் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு சீனன் கோட்டை பகுதியில் தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிவாசல்கள்,ஸாவியாக்கள் மற்றும் இஹ்வான்களின் வீடுகளில் புனித ஸுப்ஹான மவ்லூத் மஜ்லிஸ் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த மாதத்தினை முன்னிட்டு பள்ளிவாசல்கள்,ஸாவியாக்கள்,தக்கியிக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் மின்னொளி கொண்டு அழங்கரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)