ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை.

அடுத்த சில நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சிகிச்சை முடிந்த பிறகு அனைத்து தரப்பினரிடமும் உரையாற்றுவாரென எதிர்பார்க்கப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.