பல்கலை அனுமதிக்கான Z புள்ளிகள் வெளியானது
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறியில் இணைவதற்கு தேவையான குறைந்தபட்ச “Z” மதிப்பெண்கள் தொடர்புடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் பின்வரும் முறைகள் மூலம் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத்தை தெரிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள.
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம்
இணையதளம்: www.ugc.ac.lk - பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தை அழைப்பதன் மூலம்
தொலைபேசி எண்கள்: 0112695301/ 0112695302/ 0112692357/ 0112675854 - பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பது குருந்தகவல்கள் (SMS) மூலம் அறிவிக்கப்படும்.