சில இடங்களில் மழை பெய்யலாம்
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் இலேசான மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.