20 புதுமணத் தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்; ரிஷாத் பதியுதீன் தலைமையில் நாகவில்லுவில் நிகழ்வு
ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் அதி மதிப்புக்குரிய தாபகத் தலைவர் செய்க் ஸாயித் பின் சுல்தான் அல் நஹியான் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரே நேரத்தில் 20 திருமணத் தம்பதிகளுக்கு மணம் முடித்து வைத்தல் நிகழ்வு
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் அதி மதிப்புக்குரிய தாபகத் தலைவர் செய்க் ஸாயித் பின் சுல்தான் அல் நஹியான் ஞாபகார்த்தமாக செய்க் முஹம்மட் பத்தாஹ் அலி அப்துல்லா அல் காஜாஹ் அவர்களின் அனுசரணையுடன் ழுர்சுனு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வரலாற்றில் முதற் தடவையாக புத்தளம் பாலாவி நாகவில்லுவ வைட் மண்டபத்தில் ஓய்வு நிலைப் நீதி மன்ற நீதிபதி சலீம் மர்சூ,ப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் உயர்ஸ்தானிகர் காலித் நாசர் அல் அமரி, பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ. எம். இல்லியாஸ், வர்த்தகப் பிரமுகர்களான டி.. எல். எம். நவாஸ், கே. பி. அலாவுதீன், ஜவ்பர் அப்துல் சத்தார், முஹமட் ஹாரூன் அஹமட், முஹமட்; இக்பால் சத்தார், இப்திகார் சாதீக், அமீன் பைலா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முத்து வாப்பா, புத்தளம் நகர சபையின் முதலவர் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் அவ்வமைப்பின் செயலாளர் அகில இலங்கை வை. எம். எம். ஏ. முன்னாள் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, வைத்தியர் மரீனா தாஹா, ஆகியோர்களுடன் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் திருமணத் தம்பதிகளுக்கான விசேட மார்க்கச் சொற்பொழிவினை கலாநிதி அஷ்ஷெய்க் எம். எல். எம். முபாரக் மதனி அவர்களும் விசேட துஆப் பிரார்த்தனை அல்ஹாபிழ் ரியாஸ் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
இதன் போது தலா ஒவ்வொரு திருமணத் தம்பதிகளுக்கும் திருணமத்திற்கான செலவுகள் போக மேலதிமாக திருமணப் பரிசாக ஒவ்வொரு தம்பதிகளுக்கும் மூன்று இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.
மேலும் மேலதிகமாக கொழும்பு பாய் சங்க வர்த்தகப் பிரமுகர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா விகிதம் அன்பளிப்புத் தொகையும், தொழிலதிர் டி. எல். எம். நவாஸ் அவர்கள் ஒவ்வொரு மணத் தம்பதிகளுக்கு தலா அன்பளிப்புத் தொகையும், மற்றும் ரிசாட் பதியுதீனின் பாரியார் மற்றும் இன்னும் பல பிரமுகர்களுடைய அன்பளிப்புக்கள் என திருமணப் பரிசில்களாக வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
20 உலமாக்களுடன் விவாகப் பதிவாளர், திருமணத் தம்பதிகளின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் மற்றும் இதன் ஏற்பாட்டுக் குழுவினர்கள் என்று பல நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதில் சகலருக்கும் திருமண பகல் போசன விருந்துபசாரமும் நடைபெற்றது.






(இக்பால் அலி)