புத்தளத்தில் சிறப்பாக இடம்பெற்ற விடியல் செய்திமடல் வெளியீடு



புத்தளம் விடியல் ஊடக வட்டம், ஒபேட் நிறுவனம் மற்றும் வை.எம்.எம் ஏ புத்தளம் கிளை என்பன இணைந்து ஏற்பாடு செய்த விடியல் செய்திமடல் வெளியீடும் புத்தளம் மாநகர மேயர் மற்றும் அங்கத்தவர்கள் கௌரவிப்பும் ஞாயிற்றுக்கிழமை (24) புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் வை.எம்.எம்.ஏ இன் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.டி எம் நபீல் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் எம் எஸ் எம் அனஸ் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விஷேட அதிதியாக புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் எம் எப் றின்ஷாத் அஹமட் மற்றும் உதவி மேயர் எம் என் எம் நுஸ்கி சிறப்பு அதிதியாக முன்னாள் புத்தளம் வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ ஸன்ஹிர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புத்தளத்தின் விடியல் 2004 ம் ஆண்டு முதல் கலை இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்துள்ள நிலையில் அதன் இணைப்பதிப்பாக இன்றைய விடியல் செய்தி மடல் வெளியிடப்படுவதாக கருத்து தெரிவித்த அதன் ஆசிரியர் எம் டி எம் நபீல் கல்வி. சமூக அபிவிருத்தி, சுற்றுலா, விளையாட்டு கலாசார சார்ந்த விடயங்களையும் தாங்கிய வண்ணம் தொடர்ந்து வெளிவரும் என்றார்.
விடியல் செய்தி மடலின் மீளாய்வு கலாநிதி ஆஸாத் ஸிராஸ் (நளீமி) இனால் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)